• Sat. Oct 11th, 2025

“நீங்களே ஒரு பெண் பாருங்கள்..”- ராகுல் காந்தியின் திருமண கோரிக்கைக்கு நகைச்சுவையாக பதிலளித்த சோனியா காந்தி

Byadmin

Jul 30, 2023

ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள வயல்களுக்கு ராகுல் காந்தி சமீபத்தில் நேரில் சென்றார். அப்போது அங்குள்ள பெண் விவசாயிகளிடம் தங்களை விரைவில் டெல்லிக்கு அழைப்பதாக வாக்குறுதி அளித்தார். அதன்படி, ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் விவசாயிகள் சிலர் காங்கிரஸ் கட்சியின் அழைப்பின் பேரில் சோனியா காந்தியின் ஜன்பட் இல்லத்திற்கு இன்று வருகை தந்தனர். அப்போது, சோனியா காந்தி சார்பில் பெண் விவசாயிகளுக்கு உணவு விருந்து அளிக்கப்பட்டது. அப்போது நடந்த உரையாடலின்போது, ராகுல் காந்தியின் திருமண நிலை குறித்து கவலை தெரிவித்தனர். மேலும், ராகுலுக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று பெண் விவசாயி ஒருவர் பரிந்துரைத்தார். அதற்கு நகைச்சுவையாக பதிலளித்த சோனியா காந்தி, நீங்களே ராகுல் காந்திக்கு ஒரு பெண்ணை பாருங்கள் என்று கூறினார். அப்போது, அங்கிருந்தவர்கள் சிரித்து மகிழ்ந்தனர். இதுகுறித்து வீடியோ ஒன்றை ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், ” சில சிறப்பு விருந்தினர்களுடன் அம்மா, பிரியங்கா மற்றும் எனக்கு நினைவில் இருக்க வேண்டிய நாள்! சோனிபட்டின் விவசாய சகோதரிகளின் டெல்லி வருகை, அவர்களுடன் வீட்டில் உணவு விருந்து, மற்றும் நிறைய வேடிக்கையான விஷயங்கள் நடந்தன. தேசி நெய், இனிப்பு லஸ்ஸி, வீட்டில் செய்யப்பட்ட ஊறுகாய் மற்றும் நிறைய அன்பு என விலைமதிப்பற்ற பரிசுகள் கிடைத்தன” என்று பதிவிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *