• Sun. Oct 12th, 2025

EPF வழக்கில் சட்டமா அதிபருக்கு  காலவகாசம் 

Byadmin

Jul 27, 2023


ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் பெற்ற கடனை நீக்குவதை தடுத்து உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிப்பதற்காக  அடுத்த மாதம் 27 ஆம் திகதி அழைக்குமாறு  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு இன்று அழைக்கப்பட்ட போது, ​​வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கு கால அவகாசம் வழங்குமாறு சட்டமா அதிபர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய அதற்கு காலவகாசம் வழங்கி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தேச தேசிய கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்திலிருந்து பெறப்பட்ட கடன்களை நீக்குவதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி அனைத்து நிறுவன ஊழியர் சங்கம், அதன் தலைவர் வசந்த சமரசிங்க அதன் செயலாளர் ஜனக அதிகாரி உள்ளிட்ட 6 பேர் சார்பில் சட்டத்தரணி சுனில் வட்டகலவால்  இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *