• Sun. Oct 12th, 2025

வங்கிகளில் குவிந்துள்ள மக்கள் – நீண்ட வரிசையில் காத்திருப்பு

Byadmin

Jul 28, 2023

மலையகத்தில் அஸ்வெசும நலன்புரி நிதியினை பெற்றுக் கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட மக்கள் வங்கி கணக்குகளை திறப்பதற்காக ஹட்டன் நகரில் உள்ள மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கியில் நேற்று (27) மாலை முதல் தங்கி வருவதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வங்கிகளில் கணக்கு திறப்பதற்காக பெரும் எண்ணிக்கையில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.இந்நிலை வங்கியில் அதிக நெரிசல் நிலை உருவானதால் வங்கி கணக்குகளை திறப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில் குறிப்பிட்ட அளவு வங்கி கணக்கு மாத்திரம் திறக்கப்படுவதனால் பொது மக்கள் முண்டியடித்து வங்கியிலேயே தங்கி இருந்து பெற்று வருதாக தெரிவிக்கின்றனர்.
இது குறித்த பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில்,கடந்த சில தினங்களாக வங்கி கணக்கினை ஆரம்பிப்பதற்காக வருகை தந்தாகவும் முடியாது போனதால் இன்று எப்படியாவுது ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக குடும்பத்துடன் நேற்று (27) இரவு முதல் வந்து காத்திருப்பதாக தெரிவித்தனர்.நாட்டில் வரிசை முறை இல்லதொழிக்கப்பட்ட நிலையில் தற்போது தற்போது அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருப்பது பொருத்தமற்ற நிலை எனவும் எனவே வங்கி கணக்குகளை திறப்பதற்கு தேவையான விண்ணப்ப படிவங்களை வழங்கி அவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதன் மூலம் இவ்வாறான நெருக்கடிகளை தவிர்த்து கொள்ளலாம் அத்தோடு வீணான அலைச்சலையும் தவிர்த்து கொள்ளலாம் என பலரும் சுட்டிக் காட்டுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *