இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாமில் திரஸ பெரேரா, சாமர கப்புகெதர மற்றும் மிலிந்த சிறிவர்தன ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, டெஸ்ட் அணித் தலைவர் டினேஷ் சந்திமல் மற்றும் லகிரு திரிமான்னே ஆகியோர் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு கிரிக்ககெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இலங்கை அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி எதிர்வரும் 20 ஆம் திகதி தம்புள்ளை விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள நிலையில், இலங்கை அணியின் 15 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி விபரம் வருமாறு,
உபுல் தரங்க ( அணி தலைவர் ), அஞ்சலோ மெத்தியூஸ், நிரோஷன் டிக்வெல்ல, தனுஷ்க குணதிலக, குசல் மென்டிஸ், ஷாமர கப்புகெதர, மிலிந்த சிறிவர்தன, மிலிந்த புஷ்பகுமார, அகில தனஞ்சய, லக்ஷன் சந்தகன், திஸர பெரேரா, வனிந்து ஹசரங்க, லசித் மாலிங்க, துஷ்மந்த ஷமிர, விஷ்வ பெர்னான்டோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் நேர அட்டவணை வருமாறு,