இலங்கை ரசிகர்களால் மைதானத்தில் இனி பிரச்சினைகள் ஏற்படாது என்ற உத்தரவாதத்தை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அளிக்க வேண்டும் என ICC தலைமை நிர்வாகி வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை – இந்தியா இடையே பல்லேகல மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் இலங்கை தோல்வியடைந்தது. இந்தத் தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத இலங்கை ரசிக்கள் செருப்புகள் மற்றும் போத்தல்களை மைதானத்தில் வீசினர். இதனால் போட்டி தடைப்பட்டது. இந்நிலையில் இனிவ்ரும் போட்டிகளில்
இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாதவாறு இலங்கை கிரிக்கர் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க ICC வலியுறுத்தியுள்ளது. இதனை அடுத்து பாதுகாப்பு குறித்து பேச முக்கிய கூட்டத்தை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் நடத்த உள்ளது. நிர்வாகும் சார்பில் பேசியவர், பாதுகாப்பு அதி காரிகளுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்த உள்ளோம்.
கொழும்பில் நடக்கவுள்ள போட்டியில் தவறு ஏதும் நடக்காது என தாம் நம்புவதாக தெரிவித்தார். அத்துடன் ரசிகர்கள் மைதானத்தில் இருக்கும் இடத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சாதாரண உடையில் அமர்ந்து இருக்க உள்ளதாகவும், ரகளை செய்பவர்களுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.