இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்று வரும் ஒரு நாள் போட்டித்தொடரின் 4ஆவது போட்டி இன்று ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.ஏலவே தம்புள்ளை மற்றும் பல்லேகல மைதானங்களில் இடம்பெற்ற போட்டியின் போது போட்டியை பார்வையிட வந்த ரசிகர்கள் குழப்பங்களை ஏற்படுத்தினர்.இதனை தொடர்ந்து சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.நாளை ஆர்.பிரேமதாச மைதானத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிசாரும் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுப்பட்வுள்ளனர்.அத்துடன் கலகம் அடக்கும் பொலிசாரும் பணியில் ஈடுபடுவார்கள்.நூற்றுக்கும் அதிகமான பாதுகாப்பு கெமராக்களும் மைதானத்தில் உள்ளன.சிவில் உடையிலும் ரசிகர்களுடன் ஒன்றாக இருந்து சில பொலிசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளவுள்ளனர்.அத்துடன் சில பொருட்களை ரசிகர் கொண்டுவரவோ பயன்படுத்தவோ தடை வித்திக்கப்பட்டுள்ளது.நாட்டினுடைய தேசிய கொடியை உயர்த்திப்பிடிக்க பயன்படுத்தும் பொருட்கள், மது, சிகரட், தீப்பெட்டி, கூரான ஆயுதங்கள், கண்ணாடி போத்தல்கள், ஒலிப்பான்கள் (Horns) என்பனவும் தடை செய்யப்பட்டுள்ளன.நாளை இரு அணிகளுக்குமிடையிலான 4ஆவது ஒருநாள் போட்டி இடம்பெறவுள்ளது.ஏற்கனவே இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.