• Sun. May 24th, 2026

கண்டி பாடசாலைகளுக்கு பூட்டு

Byadmin

Aug 27, 2023

கண்டி நகர எல்லைக்கு உட்பட்ட அனைத்து அரசாங்க பாடசாலைகளையும் அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் 28, 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் பாடசாலைகள் நடைபெறாது என மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்தார்.
பாடசாலைகள் மூடப்படும் மூன்று நாட்களுக்குப் பதிலாக சனிக்கிழமை மூன்று நாட்களுக்கு பாடசாலைகள் நடைபெறும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வாரம் விடுமுறை வழங்கப்படவுள்ள பாடசாலைகள்
*கண்டி நகரத்திலிருந்து கடுகஸ்தோட்டை பாலம் வரையிலான பாடசாலைகள்
*கண்டி நகரத்திலிருந்து பேராதனை பாலம் மற்றும் கன்னோறுவ சந்தி வரையான பாடசாலைகள்
*கண்டி நகரத்திலிருந்து குளச்சுற்றுவட்டத்திலிருந்து  அம்பிட்டிய வரையான பாடசாலைகள்
*கண்டி நகரத்திலிருந்து தென்னேகும்புர பாலம் வரை
*தொடம்வல ரோயல் ஆரம்பப் பாடசாலை/போவல வத்தை /ஹந்தான வரையான பாடசா​லைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *