• Sun. Oct 12th, 2025

சிறுமியை துஸ்பிரயோகம் செய்த இளைஞனுக்கு விளக்கமறியல்

Byadmin

Aug 27, 2023


மட்டக்களப்பு – வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோம் மேற்கொண்ட 18 வயது உடைய இளைஞன் ஒருவரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று (26) வாழைச்சேனை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 15 சிறுமியை காதலித்து வந்த 18 வயது இளைஞன் திருமணம் முடிப்பதாக சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து இளைஞனை 25 ஆம் திகதி கைது செய்ததுடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட இளைஞனை நேற்று (26) வாழைச்சேனை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *