• Sun. Oct 12th, 2025

சிகிரியாவை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை

Byadmin

Aug 28, 2023

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ் 15 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு பெருமளவு வருமானத்தை ஈட்ட முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

சிகிரியாவை சுற்றுலாப் பிரதேசமாக அபிவிருத்தி செய்ததன் பிரகாரம், புதிய கிராம வாகன தரிப்பிடம், சுகாதார வசதிகள் மற்றும் சிகிரியா நுழைவாயில் நிர்மாணம், சிகிரியா தகவல் நிலையத்தை நிறுவுதல், மாபாகல தொல்பொருள் நிலையத்தை பாதுகாத்தல், சிகிரியா ஏரியை புனரமைத்தல், ராமகெலேயில் இருந்து பிதுரங்கல வரையிலான பாரம்பரிய பாதையை நிறுவுதல்.

கலுதிய குளத்தைச் சுற்றியுள்ள தொல்பொருள் நிலையங்களைப் பாதுகாத்தல், இனாமலுவ ஏரியை மையமாகக் கொண்ட சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கான உட்கட்டமைப்பு அபிவிருத்தி, கலேவெல ஏரியை மையமாகக் கொண்ட சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலா உள்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் திகம்பத்தன பிரதேசத்தில் திடக்கழிவு மேலாண்மை அமைப்பு அபிவிருத்தி ஆகிய 9 உப திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, ​​சிகிரியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்கள் பிளாஸ்டிக் பாவனையற்ற சூழலுக்கு உகந்த சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படை திட்டமிடல் நடவடிக்கைகள் இந்த நாட்களில் அனைத்து தரப்பினருடனும் இணைந்து மேற்கொள்ளப்படுகின்றன.

சிகிரியாவை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்யும் போது, ​​உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அபிவிருத்திக்குத் தேவையான தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், இத்திட்டம் தொடர்பில் மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தம்புள்ளை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவிற்கு அறிவிக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *