• Sun. Oct 12th, 2025

அரசாங்கம் செய்த நல்ல காரியம்

Byadmin

Sep 11, 2023

தந்தை சிறையில் இருக்கும் நிலையில், பாதுகாப்பின்றி இருந்த பிள்ளைகளின் தாய் மத்திய கிழக்கு நாடென்றில் இருந்து இன்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

குருநாகல் – கீழ் கிறிபாவா பகுதியில் இருக்கும் இந்த குடும்பத்தினரின் வீடு வனப்பகுதியின் மத்தியில் அமைந்துள்ளது.

மூன்று பிள்ளைகளை கொண்ட இந்த குடுத்தின் மூத்த பிள்ளைக்கு 15 வயது ஆகின்றது.

எனினும், குடுபத்தின் வறுமை காரணமாக குவைத்திற்கு சென்றிருந்த தாய், அங்கு உரிய வேலைக்கிடைக்காமல் ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

குறித்த பெண் முன்னர் ஓமானில் பணிபுரிந்திருந்த போதிலும், கணவரின் வேண்டுகோளுக்கு இணங்க தனது சேவைக் காலம் முடிவதற்குள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், குறித்த பெண்ணின் பிள்ளைகள் பாதுகாப்பின்றி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து துரிதமாகச் செயற்பட்ட அமைச்சர், குவைத் தூதுவர் மற்றும் அதன் உயர் அதிகாரிகள் நேரடியாக தலையிட்டு குவைத்தில் இருந்த குறித்த பெண்ணை உடனடியாக இலங்கைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தனர்.

குறித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமும் இந்தப் பெண்ணை இலங்கைக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்காக 900,000 ரூபாய் செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் 24 மணித்தியாலங்களுக்குள் அந்த பெண் தனது பிள்ளைகளுடன் மீண்டும் இணைவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுத்திருந்தது.

அந்த வகையில் இன்று காலை நாடு திரும்பியிருந்த பெண், பிற்பகல் நான்கு மணியளவில் தனது பிள்ளைகளுடன் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது மூன்று குழந்தைகளை தனது தாயின் பராமரிப்பில் விட்டுவிட்டு வெளிநாடு சென்றதாக கூறும் அந்த பெண், தனது தாய் புற்றுநோயால் இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனது தாய் நாடு திரும்பியுள்ள நிலையில், பாதுகாப்பின்றி இருந்து பிள்ளைகளுக்கு நிம்மதி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *