• Sun. Apr 12th, 2026

2024 ஜனவரி மாதம் பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் : தேர்தல் ஆணையம்

Byadmin

Sep 21, 2023

2024 ஜனவரி மாத கடைசி வார காலகட்டத்தில் பாகிஸ்தானின் பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது. அந்நாட்டின் தொகுதி சீரமைப்புக்கான முதல் பட்டியல் இம்மாதம் 27 அன்று வெளியிடப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் மற்றும் சம்பந்தபட்டவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு பரிசீலனை செய்யப்பட்ட பிறகு இறுதி பட்டியல் நவம்பர் 30 அன்று வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இதற்கு பிறகு 54-நாள் தேர்தல் பணிகள் நடைபெற்ற பிறகு ஜனவரி கடைசி வாரம் தேர்தல் நடைபெறும் என கூறியுள்ளது. அந்நாட்டில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஏ-இன்ஸாஃப் கட்சியும், ஷெஹ்பாஸ் ஷரீஃப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியும் பிலாவால் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் பிரதான கட்சிகளாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *