நாட்டில் பெய்து வரும் கடும் மழையினால் கங்கைகளின் தாழ்வான பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்ப்பாசன, நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ். பி. சி. சுகீஸ்வர சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தனகலு ஓயா, களனி கங்கை, களு கங்கை, நில்வலா கங்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய கிளை ஆறுகளின் (பெந்தர, பொல்அதுமோதர) தற்போதைய வெள்ள நிலைமை திடீரென அதிகரிக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெள்ளப்பெருக்கு தொடர்பில் பொது மக்கள் அவதானம்
