• Sat. Oct 11th, 2025

யானையை சுட்ட அதிகாரிக்கு பிணை

Byadmin

Sep 30, 2023

பெரஹெராவிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
மஹியங்கனை எசல பெரஹெராவில் கலந்துகொண்ட சீதா என்ற யானையை காட்டு யானை என நினைத்து மாபகடவெவ வனஜீவராசிகள் அலுவலகத்தில் கடமையாற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இன்று (30) அதிகாலை 03.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட சந்தேகநபரை மஹியங்கனை பதில் நீதவான் எஸ். கோவிந்த முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயத்திற்கு உள்ளான சீதா என்ற  47 வயது யானைக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் யானை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *