கொழும்பு மாநகரில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான குடிசை வீடுகள் உள்ளதாகவும் 2020 ஆம் ஆண்டிற்குள் இவற்றை அகற்றும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் பாரிய நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு, மலையக மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதை போலவே கொழும்பில் வாழும் குடிசை மக்களுக்கும் வீடுகள் கொடுப்பது அரசாங்கத்தின் கடமை எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.