• Sun. Oct 12th, 2025

சோமாலிய கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் மீட்பு

Byadmin

Jan 29, 2024

சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் 6 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சீஷெல்ஸ் கடலோர காவல்படையினரால் இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, மூன்று கடற்கொள்ளையர்களையும் சீஷெல்ஸ் கடற்படையினர் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த மீன்பிடி கப்பலில் இருந்த 06 மீனவர்களும் பாதுகாப்பாக உள்ளதாக அந்நாட்டு கடற்படையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதன்படி, குறித்த மீன்பிடி படகு சீஷெல்சின் விக்டோரியா  தலைநகருக்கு  கொண்டு செல்லப்படுவதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

கடந்த 12ஆம் திகதி சிலாபம், திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீன்பிடிப் படகு ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்டது. 

அதில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த 6 மீனவர்கள்  சிறைப்பிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *