திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர், மூதூர், கந்தளாய் ஆகிய பகுதிகளில், திங்கட்கிழமை இரவு 8.45 அளவில் சத்தத்துடன் சிறியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இந்த அதிர்வு 3 விநாடிகள் அளவில் உணரப்பட்டது.
இந்நில அதிர்வின் மூலம் சில வீடுகளில் மேசைகளில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பொருட்கள் கீழே விழுந்து உடைந்துள்ளன.
எனினும், பெரியளவில் சேதங்கள் ஏற்படவில்லை. நிள அதிர்வின் பயத்தினால் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பிரதான வீதிகளுக்க வந்ததை அவதானிக்க முடிந்தது.
-ஹஸ்பர் ஏ ஹலீம் –