• Sun. Oct 12th, 2025

புதிய கல்வி கொள்கைக்கு அமைவாக பல்லூடக வகுப்பறைகள்

Byadmin

Sep 12, 2017

புதிய கல்வி கொள்கைக்கு அமைய பல்லூடக வகுப்பறைகள் ஆரம்பிதற்கான நடவடிக்கைகள் கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இலங்கையில் காணப்படும் பாடசாலைகளில் தெரிவுசெய்யப்பட்ட 300 பாடசாலைகளில் பல்லூடக வகுப்பறைகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் நோக்கம் புதிய தொழில்நுட்பதினை பாவித்து கற்றல் கற்பித்தலை மேற்கொள்வதற்கும் மாணவர்கள் இலகுவாக புரிந்து கொண்டு கல்வி கற்பதற்குமாகும்.
அதன் ஒரு கட்டமாக மலையகத்தில் முதவாது பல்லூடக வகுப்பறை புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியில் அமைக்கபட்டு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனினால் அண்மையில் திறந்து வைக்கபட்டது.
இந்த பல்லூடக வகுப்பறைகள் மலையக பெருந்தோட்ட பாடசாலைகளிலும் அமைப்பதற்கு தற்போது இந்தியாவின் ரோட்டரி கழகத்தினர் முன் வந்துள்ளனர்.
இந்த வேலைதிட்டதை முன்னெடுப்பது தொடர்பாக இலங்கை வந்துள்ள இந்தியாவின் ரோட்டரி கழகத்தின் உயர் அதிகாரிகளுக்கும் கல்வி இராஜாங்க அமைச்சருக்குமான கலந்துரையாடல் ஒன்று நுவரெலியா கல்வி இராஜாங்க அமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்றது.
புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரிக்கு நேற்று முன்தினம் விஜயம் செய்த இவர்கள் பல்லூடக வகுப்பறையில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பங்களை பார்வையிட்டனர் .
இதன் பயனாக பெருந்தோட்ட பாடசாலைகளில் இந்த பல்லூடக வகுப்பறைகள் அமைப்பதற்கு முதற்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது.
தற்போது புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியில் அமைக்கபட்டுள்ள பல்லூடக வகுப்பறையினை மலையக பெருந்தோட்ட மாணவர்கள் பயன்படுத்தி வரும் அதேவேளை இங்கு ஆசிரியர்களுக்கான பயிற்சிகள்¸ கருத்தரங்குகள்¸ நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *