• Sat. Oct 11th, 2025

தோல் நோய்கள் அதிகரிப்பு!

Byadmin

Feb 12, 2024

இத்தினங்களில் நிலவும் மிகவும் வறண்ட வானிலை காரணமாக தோல் நோய்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அத தெரண ‘பிக் ஃபோகஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைத்தியர், இந்த நிலைமை சிறுவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
ஆஸ்துமா போன்ற அறிகுறிகள் உள்ள குழந்தைகளுக்கு கூட இந்நாட்களில் குளிப்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு தடவையாவது குளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும், ஒருவருக்கு தோல் நோய்கள் இருப்பின் காலையிலும் இரவிலும் சுமார் 20 நிமிடம் நீரில் இருப்பதன் மூலம் ஓரளவு கட்டுப்படுத்த முடியும் எனவும் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
குழந்தைகள் பகலில் விளையாடும் போது அவர்களுக்கு வீட்டினுள்ளே விளையாட வசதிகள் செய்துக் கொடுக்குமாறும், போதியளவில் தண்ணீர் மற்றும் திரவங்களை குடிக்க கொடுக்காவிட்டால், வெப்ப அதிர்ச்சிக்கு ஆளாகி மணத்திற்கு கூட வழிவகுக்கும் என மருத்துவர் மேலும் தெரிவித்தார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *