சவூதி லைசன்ஸ் பெறத் தேவைப்படும் மருத்துவச் சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்காக தினசரி 750 முதல் 800 பேர் வரை தேசிய போக்குவரத்து மருத்துவ நிலையத்துக்கு வருகை தருவதாக, நிலையத்தின் பிரதம மருத் துவ அதிகாரி கே. எஸ். எம். சமர சேகர தெரிவித்தார்.
நாட்டிலுள்ள 25 கிளை அலுவலகங்களுடாக இச் சேவை வழங்கப்படுகிறது.
அதேவேளை வழமையாக பிரதம அலுவலகத்துக்கு 450 பேர் வரை வருகை தந்தனர். அந்த எண்ணிக்கை தற்போது 800 வரை அதிகரித் துள்ளதாகவும் திருமதி சமரசே கர தெரிவித்துள்ளார்.
லைசென்ஸ் இல்லாமல் வாகனம் செலுத்துபவர்களுக்கு, அபராதம் விதிக்க அரசாங்கம் நடவ டிக்கை எடுத்த பின்னர் 4500 பேர் வரை நாளாந்தம் இந்நிலையத்துக்கு வருகை தருவதாக அவர் தெரிவித்தார்.
இதில் அதிகமானோர் புதிதாக கொள் வனவு செய்த இலகு வாகனங்களுக் கும், கனரக வாகனங்களுக்குமான லைசனை புதுப்பித்துக் கொள்ளவே வருகை தருகின்றனர்.