வளங்களை சரியாக இணங்கண்டு அவற்றை அபிவிருத்தி செய்வதன் மூலம் நாட்டை முன்னேற்ற பாதைக்கு இட்டுச்செல்லலாம் என கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.
திருகோணமலை பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்று வரும் சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டில் பிரதம அதிதியாக இன்று (13) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், இலங்கை பல்லின மக்களை கொண்ட பல்வகை வளங்களைக்கொண்ட நாடாகும்!
விஷேடமாக கிழக்கு மாகாணம் அதிலும் திருகோணமலை மாவட்டம் சர்வசே முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக காணப்படுகின்றது. காரணம் இங்கு பல்வேறு வளங்கள்- இயற்கை துறைமுகம் உட்பட பல அம்சங்கள் நிறைந்து காணப்படுவதாகும்.
கிழக்கு மாகாணம் பதினாறு இலச்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையை கொண்டதும் 440 கிலோமீட்டர் நீண்ட கடற்கரையைக்கொண்ட பிரதேசமாகும்.
இங்கு காணப்படுகின்ற வளங்களை சரியாக இணங்கண்டு பயன்படுத்துவதன் ஊடாக மாகாணத்தையும் .நாட்டையும் முன்னேற்ற பாதைக்கு இட்டுச்செல்லலாம் எனவும் அவர் கூறினார்.
துரைசார் அடிப்படையிலான கள ஆய்வுகள் அபிவிருத்திக்கு மூல காரணமாக காணப்படுகின்றது. மனித வளம் மேம்படுத்தப்பட வேண்டும்.கிழக்கு மாகாணத்தின் வேலையின்மை வீதம் 6 வீதம் என உத்தியோகபூர்வமாக கூறப்பட்டாலும் உத்தியோகபூர்வகமில்லாத அடிப்படையில் இருபது வீதம் இருக்குமென நம்ம முடிகின்றது.
எப்போதும் பிறர் உதவி செய்வார்கள் என்ற மனப்பாங்கிலே நம்மில் அதிகமானோர் இருக்கின்றனர்.
இந்நிலையை மாற்றி சுய நம்பிக்கையோடு அனைவரும் முன்னேற வேண்டும்.நாட்டில் தற்போது நல்லிணக்கம் நிலவுகின்றது. தமிழ் மொழி என்னால் பேச முடியாமல் இருந்தாலும் அம்மொழிகளுக்குறிய கௌரவத்தை நான் வழங்குவேன்.
ஜனாதிபதி மற்றும் பிரதம ஆகியோர் நாட்டை இன மத மொழி வேறுபாடற்ற முறையில் அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்ல முனைப்புடன் செயற்படுவதாகவும் இன-மத- மொழி பேதம் முன்னிலைப்படுத்தப்பட அவசியம் இல்லாது நாட்டை முன்னிலைப்படுத்துவது இன்றியமையாததென்று கிழக்கு மாகாண அளுனர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.
-ABDUL SALAM YASEEM – TRINCO