நல்லாட்சி அரசின் யுத்திகள் மக்களை முட்டாள்களாக்கி நாட்டுமக்களின் வாழ்வாதாரத்தை படுகுழியில் தள்ளுவதை குறிக்கோளாக கொண்டதாக உள்ளது.
நாட்டு மக்களின் மீது அதிக அக்கறை கொண்ட அரசாக இருந்தால் நாட்டு மக்களின் மீது அன்பும் அவர்களின் சுகாதாரத்தின் மீது அக்கறையும் கொண்ட அரசாக இருக்க ஆசையிருந்தால் வரிவித்திப்பதை தவிர்த்து மாற்றுவழியை காட்ட முன்வரவேண்டும்.
நாட்டு மக்களின் அத்தியாவசிய பொருட்களான சீனி,பருப்பு,கோதுமை,மிளகாய்,
இதனைவிட தீவிர நோய்களை உண்டாக்கும் புகையிலை உற்பத்திகளையும் மதுபான உற்பத்திகளுக்குமான வரியை மிக அதிகாமாக அதிகரிப்பதன் மூலம் ஆரோக்கியமான இலங்கையை கட்டியெழுப்ப முடியும்.
நீரிழிவை காரணம் காட்டி சீனியின் வரியையும் கொழுப்பை காரணம் காட்டி எண்ணையின் விலையையும் இன்னோரன்ன நோய்களை காரணம் காட்டி மற்றும் பல அத்தியாவசிய பொருட்களின் விலையையும் சுற்றாடலின் மாசுபடலை காரணம் காட்டி பெற்றோல்,டீசல் போன்றவற்றின் விலையையும்,வரியையும் உயர்த்தி இந்த நல்லாட்சிக்கு வாக்களித்த மக்களின் முதுகில் மாத்திரமில்லாது நெஞ்சிலும் குத்தும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக இந்த நல்லாட்சியின் அரசியல்வாதிகள் முன்னெடுப்பது வேதனையான ஒன்றே.
நடுத்தர வர்க்க மக்களை அதிகப்படியாக கொண்ட அபிவிருத்தியடைந்து வரும் நாட்டுக்கு அதிகவரி ச்சுமை மக்களால் சுமக்கமுடியாத சுமை என்பதை அரசியல் முக்கியஸ்தர்கள் அறிந்துகொண்டு செயற்படவேண்டும்.
நாட்டின் கடனை அடைக்கவேண்டும்,நோய்களை ஒழிக்கவேண்டும் என கூறும் நமது அரசு அதற்க்கெல்லாம் வரியை உயர்த்துவதை தவிர்த்து பதுக்கல் முதலைகளின் பதுக்கல்களை வெளிக்கொணர்ந்தாலும் அரச வைத்தியசாலைகளை சீராக பராமரித்தாலும் போதும் எமது தேசம் ஐக்கிய அமெரிக்காவினை விட செல்வாக்கான நாடாக இருக்கும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அல்ஹாஜ் நூறுல் ஹுதா உமர்
தலைவர்,அல்-மீஸான் பௌண்டசன்
ஸ்ரீலங்கா