மியன்மார் ராக்கைன் மாநிலத்தில் வன்முறைகளில் சிக்குண்டு அகதிகளாக்கப்பட்ட ரோஹிங்ய இன முஸ்லிம்களுக்கு மனிதநேய ரீதியில் உதவ இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார்.
அத்துடன், ரஹிங்ய முஸ்லிம்கள் பேராபத்தில் இருக்கின்ற நிலையில் நாம் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொள்ள மாட்டோம் எனவும் அவர் நேற்றைய தினம் (21/09/2017) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மியன்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தாக்குதல்களை இலங்கை அரசாங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
அங்கு இடம்பெறும் மோசமான சம்பவங்களை யிட்டு நாம் கவலையடைகிறோம் இலங்கைகக்கும் மியன்மாருக்கும் இடையே நீண்டகால தொடர்பு இருக் கின்றது.
குறிப்பாக இரு நாட்டுக்கும் பெளத்த மத ரீதியான தொடர்புகள் மிகத் தொன்மையானவை. இரு நாட்டு உறவு களும் மிக நெருக்கமானதே.
இந்நிலையில், அந்நாட்டின் இன்று ஏற்பட்டிருக்கும் மோசமான நிலை குறித்து நாம் எமது கண்டனத்தை தெரிவிக்கிறோம். அத்தோடு, அகதிகளாக் கப்பட்ட ரோஹிங்ய முஸ்லிம் மக்கள் விடயத்தில் நாம் கரிசனையுடனேயே இருக்கிறோம்.
தற்போது ஏற்பட்டிருக்கும் மிக மோசமான நிலையில் நாம் எமது முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொள்ளப்போவ தில்லை. குறிப்பாக, கடந்த காலங்களில் அவர்களை நாம் அரவணைத்திருக் கிறோம். இனிவரும் காலங்களிலும் மணி தாபிமான ரீதியில் அவர்களுக்கு உதவ எந்நேரமும் தயாராகவே இருக்கிறோம்.
அத்துடன், ஐக்கிய நாடுகள் ஸ்தாபன அகதிகள் முகவராண்மையின் பிரக டனத்துக்கமைய ரோஹிங்ய முஸ்லிம்க ளுக்கு ஆதரவளிப்போம். அகதிகளுக்கு அடைக்கலமளிப்பதில் நெருக்கடி ஏற்ப டுமிடத்து நாம் அவர்களுக்கு அடைக்க லமளிக்கவும் தயாராகவே இருக்கிறோம்
இலங்கையில், இருக்கின்ற மியன்மார் அகதிகளுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்குவோம்
மியன்மாரில் சட்டம் ஒழுங்கு சீர்கு லைந்துள்ளது. இந்நிலை சீராக்கப்ப டவேண்டும் என நாம் எமது அழுத் தங்களை தெரிவிப்போம். அத்தோடு சமாதானத்தை ஏற்படுத்துமாறு வலியு றுத்துவோம் என்றார்.
-எம்.எம்.மின்ஹாஜ் –