• Sat. Oct 11th, 2025

தர்காநகரில் இரு குழுக்கள் மோதல், ஒருவரின் நிலை கவலைக்கிடம்!

Byadmin

Sep 25, 2017

அளுத்கம, தர்காநகர் வெலிபிடியவில் இரு குழுக்களுக்கிடையில் நேற்றிரவு(24) இடம்பெற்ற மோதலில் வெட்டுக் குத்துக் காயங்களுக்கு இலக்காகிய இருவர் களுத்தறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரச்சினைக்கு காரணமானவரின் வீடும் தாக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேசத்துக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

காயமடைந்த இரு இளைஞர்களில் ஒருவரின் தலையில் வாள் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும், தற்பொழுது அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

போதைப் பொருள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சிலருக்கு இன்னுமொரு குழுவினர் அவ்வாறான தவறைச் செய்ய வேண்டாம் என அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும், இதனால், கோபமடைந்த சம்பந்தப்பட்ட குழுவினர் தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *