மொண்டெனேகுரோ தேசிய கால்பந்து அணியின் கோல் கீப்பராக இருந்த Matija Sarkic திடீரென உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை அவர் திடீரென மரணமடைந்ததாக மொண்டெனேகுரோ கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்தின் மில்வோல் கால்பந்து அணியின் கோல் கீப்பராகவும் இவர் செயற்பட்டுள்ளார்.
26 வயதான Matija Sarkic இறுதியாக கடந்த ஜூன் 5 ஆம் திகதி பெல்ஜியத்திற்கு எதிரான போட்டியில் தனது தேசிய அணிக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரபல கோல் கீப்பர் திடீரென உயிரிழப்பு
