இதுவே தனது இறுதி இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி என நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட், அறிவித்துள்ளார்.
தற்போது 34 வயதாகும் போல்ட், உகாண்டாவுக்கு எதிரான போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறியுள்ளார்.
“இது எனது கடைசி டி20 உலகக் கிண்ண போட்டி…” என்று போல்ட் கூறினார்.
இதன்படி, திங்கட்கிழமை பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான போட்டி அவரது கடைசி இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியாகும்.
இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைய நியூசிலாந்து அணி தவறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
T20 போட்டிக்கு மத்தியில் விசேட அறிப்பை வௌியிட்ட பிரபல வீரர்!
