• Sat. Oct 11th, 2025

இறுதிப் போட்டி நடைபெறும் ஆடுகளம் குறித்து வௌியான தகவல்

Byadmin

Jun 29, 2024

இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட்தொடரின் இறுதிப் போட்டி இன்று இரவு 8.00 மணிக்கு மேற்கிந்திய தீவுகள் நாட்டின் பார்படோஸ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணியும் தென்னாபிரிக்க அணியும் மோதவுள்ளன.
இந்த மைதானத்தில் இதுவரை எட்டு போட்டிகள் நடைபெற்றுள்ளன. 
ஓமன்- நமீபியா இடையிலான போட்டி சமநிலையில் முடிந்து சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. ஸ்கொட்லாந்து – இங்கிலாந்து இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டது.
ஏனைய ஆறு போட்டிகளில் மூன்று போட்டிகளில் முதலில் துடுப்பாடிய அணியும், ஏனைய 3 போட்டிகளில் இரண்டாவதாக துடுப்பாடிய அணியும் வெற்றி பெற்றுள்ளன.
பொதுவாக இந்த மைதானத்தின் ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்துள்ளன. 
கடைசியாக இங்கிலாந்து- அமெரிக்கா இடையிலான போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் ஏழு விக்கெட்டுகள் வீழ்த்தினர். 
என்றாலும் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் 4 ஓவரில் 13 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *