• Sat. Apr 4th, 2026

எரிபொருள் தாங்கி கப்பலை கைப்பற்றிய ஈரான் படை!

Byadmin

Jul 30, 2024

1.5 மில்லியன் லீற்றர் எரிபொருள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக குற்றம்சாட்டி, ஈரானிய புரட்சிப் படையினர் எரிபொருள் தாங்கி கப்பல் ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை (22) அவர்கள் குறித்த கப்பலை பாரசீக வளைகுடாவில் வைத்து தங்கள் காவலில் எடுத்துக்கொண்டுள்ளனர்.

மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவின் கொடியின் கீழ் எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்றே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

12 பேர் கொண்ட ஊழியர்கள் குழுவில் இலங்கையர்களும் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *