• Sat. Oct 11th, 2025

121 பேரை பலியெடுத்த எலி!

Byadmin

Aug 24, 2024

இந்தியாவில் கேரள மாநிலத்தில் எலிக்காய்ச்சலால் 121 பேர் பலியாகியுள்ளனர்.

கேரள மாநிலத்தில் ஒவ்வொரு பருவமழையின்போது தொற்றுநோய்கள் அதிகளவில் பரவுவது வாடிக்கையாக இருக்கிறது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே பல்வேறு காய்ச்சலகள் மற்றும் தொற்றுநோய்கள் பரவ தொடங்கின.

மேலும் அரிய வகை காய்ச்சலான மேற்குநைல், அமீபிக் மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்களும் பரவின. இதற்கு மத்தியில் எலிக்காய்ச்சலும் கேரளாவில் பரவியது.

மேலும் எலிக்காய்ச்சலுககு அதிகளவில் உயிர் பலியும் ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து (ஜனவரி மாதம் முதல்) தற்போது வரை எலி காய்ச்சலுக்கு 121 பேர் பலியாகி இருக்கின்றனர்.

மேலும் 1,936 பேர் எலி காயச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

கேரள மாநிலத்தில் எலி காய்ச்சலுக்கு 2022-ம் ஆண்டு 93 பேரும், 2023-ம் ஆண்டு 103 பேரும் பலியாகியிருக்கின்றனர்.

ஆனால் இந்த ஆண்டு 8 மாதங்கள் முடிவுறாத நிலையில் 121 பேர் பலியாகிவிட்டனர். அதில் இந்த மாதத்தில் மட்டும் 24 பேர் எலி காய்ச்சலால் இறந்துள்ளனர்.

எலி காய்ச்சல் பாதிப்பு மற்றும் அதனால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கவனமுடனும், விழிப்புடனும் இருக்குமாறு மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *