• Sat. Oct 11th, 2025

மினுவங்கெட்ட மற்றும் மீப்பே ஆகிய இரு  பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்

Byadmin

Oct 2, 2017

நாட்டில் இருவேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களுக்குள் இரு பள்ளிவாசல்கள் மீது பெற்றோல் குண்டு மற்றும் கல்விச்சுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

வாரியபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மினுவங்கெட்ட மற்றும் மீப்பே பொலிஸ் பிரிவுகளில் உள்ள பள்ளிவாசல்கள் மீதே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

மினுவங்கெட்ட பள்ளிவாசல் மீது இரு பெற்றோல் குண் டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ள போதும், அக்குண்டுகள் வெடிக்காததன் விளைவாக பாரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

பெற்றோல் குண்டுகளையும் மீட்டுள்ள வாரியபெல பொலிஸார் விஷேட விசார னைகளை ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன் பாதுக்க, மீப்பை மஸ்ஜிதுன் நூர்ஜும்ஆ பள்ளிவாசல் மீது இனந் தெரியாதோரினால் இரண்டாவது தட வையாகவும் கல்விச்சுத் தாக்குதல் நடத் தப்பட்டுள்ளது.

குறித்ததாக்குதலினால் பள்ளிவாசலின் கண்ணாடிகள் உடைந்து இந்நிலையில் சில மாதங்களாக மீதான தாக்குதல்கள் மற்றும் இனவாத
சம்பவங்கள் மீளவும் மெல்லத்தலைத் தூக்குகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன, மதவாதத்தை துண்டும் அத்தனை நடவடிக்கைகளுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கு மாறு பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந் கர மீளவும் பொலிஸ் உயரதிகாரிகளுக்கு அறிவித்தல் விடுத்துள்ளார்.

குருநாகல் வாரியபொல பொலிஸ் பிரி விற்குட்பட்டமினுவங்கெட்ட ஜும்ஆ, மஸ்ஜித் மீது இனம்தெரியாத நபர்களால் கடந்த வெள்ளியன்று (29)அதிகாலை 2 பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. அதிர்ஷ்டவசமாக இந்த குண்டுகள் எதுவும் வெடிக்காததால் எதுவித சேதமும் ஏற்படவில்லை என பள்ளிவாசல் நிர் வாகம் தெரிவித்தது.

இந்நிலையில் இது தொடர்பில் வாரி யபொல பொலிஸ் நிலைய பொறுப்ப இகாரியின் கீழ் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பெற்றோல் குண்டினை பள்ளிவாசல் மீது வீசியோரைக் கைது செய்ய நடவடிக் கை எடுக்கப்பட்டுள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்தனர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் அபே சிரி குணவர்தன மற்றும் குருநாகல் பிரதிப் பில்ஸ்மா அதிபர் மகேந்திரனின் உத்தர வுக்கு அமைய சிரேஷ்ட பொலிஸ் அத் தியட்சகர் சமன் ரத்நாயக்கவின் ஆலோச னைக்கு அமைவாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, பாதுக்க மீப்பை மஸ் ஜிதன் நூர்ஜும்ஆ பள்ளிவாசல் மீது நேற்று முன் தினம் (0)அதிகாலை 130 மணியளவில் இனந்தெரியதோரினால் கல்விச்சுத்தாக்ககுதல் நடத்தப்பட்டுள்ளது குறித்த தாக்குதலினால் பள்ளிவாசலின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியுள் ளன.

இதேவேளை இப்பள்ளிவாசல் மீது கடந்தவியாழக்கிழமை (செப்2) அதி கால்ை வேளையிலும் நாக்குதல் நடத்தப் பட்டமை குறிப்பிடத்தக்கது

குறித்ததாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது அதிகாலை 130 மணியளவில் சத்தம் ஒன்று கேட்டுள் னது அதனைத் தொடர்ந்து பள்ளிவாசலில் கடமையாற்றும் முஅத்தின் பள்ளிவா சலின் விளக்குகளை ஒளிரச் செய்துள்ளார். பின்னர் சரமாரியாக கல்விச்சுத்தாக்கல் நடத்திவிட்டு குறித்த சூத்திரதாரிகள் முச் சக்கர வண்டி மற்றும்மோட்டார் சைக் சில் தப்பிச் சென்றுள்ளனர் இதேவேளை, கடந்த வியாழக்கிழமை அதிகாலை வேளையில் பள்ளிவாசல் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் பள்ளிவாசலின் பாதுகாப்புக் கடமையில் இரு பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். எனினும் நேற் றிரவு பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கவில்லை, இவ்வா றான நிலையிலேயே இனந்தெரியாதோர் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

மேலும் குறித்ததாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுக்க பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகநபர்களைக் கைதுசெய்ய மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க மேல் மாகாணத்தின் தெற்கு பிரதிப் பொலில் மா அதிபர் வசந்த விக்ரமசிங்க ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய விஷேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் முச்சக்கரவண்டியின் இலக்கத்தை கண்டறிய சி.சி.ரி.வி காணொலிகளும் பரீட்சிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. -mn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *