சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மிமன தயாரத்ன தேரர் மற்றும் அரம்பேபொல ரத்னசார தேரர் ஆகியோர் இன்று(02) கொழும்பு குற்றதடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸை பிரதேசத்தில் மியன்மார் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பில் வாக்கு மூலம் வழங்க முன்னிலையாகிய சந்தர்ப்பத்திலேயே இவர்கள்கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 26ஆம் திகதி மியன்மார் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த கல்கிஸ்ஸை பிரதேச வாடகை குடியிருப்பு ஒன்றின் முன்னால் குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை தொடர்பில், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பெண் உட்பட்ட 5 பேரும் எதிர்வரும் 9ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.