கணவன் போட்ட சோற்றை உண்டு கொண்டு, அவன் கொடுத்த உடுப்பை உடுத்திக்கொண்டு, அவன் கட்டிய வீட்டில் வசித்துக் கொண்டு அவன் நெஞ்சில் இரவு உருண்டு படுத்துவிட்டு,,,
பின்னர் போகும் இடமெல்லாம் அவன் குறைகளை பாடித்திரிவதகும். அமரும் சபைகளில் எல்லாம் அவனை அவதூறு பரப்புவதாகும், தெரிந்தவர் தெரியாதவர்களிடம் எல்லாம் கதை கூறித் திரிவதாகும்.
அன்னை ஆயிஷா (ரழி) அவர்களின் இந்த பொன்னான கூற்றைக் கேளுங்கள்:
பெண் பெருமக்களே!
உங்கள் கணவன்மாருக்கு நீங்கள் செய்யவேண்டிய உரிமைகளை சரிவர அறிவீர்களானால் அவன் பாதங்களில் படியும் தூசியை உங்கள் திருமுகத்தால் துடைப்பீர்கள்.
கேடுகெட்ட கணவன் யார் தெரியுமா…!
தன் மனைவி சமைத்துத் தந்த சோற்றை உண்டுவிட்டு, அவள் தன் கையால் துவைத்த உடுப்பை உடுத்திவிட்டு, அவள் தன் அழகையும் ஆரோக்கியத்தையும் ஈடுவைத்து அலங்கரித்த வீட்டில் வசித்துவிட்டு,
பின்னர் போகும் இடமெல்லாம் அவன் குறைகளைப் பாடித்திரிவதாகும். அமரும் சபைகளில் எல்லாம் அவனை அவதூறு பரப்புவதாகும், தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் எல்லோரிடும் கதை கூறித் திரிவதாகும்.
ஆண்கள் பெருமக்களே…!
பெண்கள் விவாகாரத்தில் நீதி நியாயமாக நடந்து கொள்ளுங்கள்.
தெரிந்துகொள்ளுங்கள்…!
உங்களில் புனிதமானவன் உங்கள் மனைவியிடம் புனிதமானவர்தான்.
நாகரீகமானவன் மாத்திரமே பெண்களை நாகரீகமான நடாத்துவான். அநாகரீகமான ஒருவன் மாத்திரமே பெண்களை அநாகரீகமான நாடாத்துவான்.
அன்பின் தம்பதிகளே…!
உங்களுக்கிடையில் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும்கூட இந்த வான் மறை வசனத்தை மறக்காதீர்கள்.
(( உங்களுக்கு மத்தியில் உள்ள நிறைகளை மறக்காதீர்கள்))
✍ தமிழாக்கம் / imran farook