• Sun. Oct 12th, 2025

நல்லெண்ணம் வைப்பதில், நலவுகள் பல உள்ளன…!

Byadmin

Oct 16, 2024

தொடர்பாடல் ஒழுங்குமுறைகள்

நீங்கள் தொலைபேசியில் ஒருவருக்கு பலமுறை தொடர்பு கொண்டும் பதில் அளிக்காமல் இருந்தால், மறுநாள் அவனைக் காணும் போது ஏன் பதில் அளிக்கவில்லை என்று கேட்டு சஞ்சலப் படுத்தாதீர்கள்!

அந்த இடத்தில் அவன் மரியாதையை காக்க உன்னிடம் பொய் உரைக்க நிர்ப்பந்திக்கப்படுகிறான். ‘ நான் அவதானிக்கவில்லை, அல்லது வேலைப் பளுவில் இருந்தேன்’ என காரணம் சொல்ல தூண்டப்படுகிறான்.

பெரும்பாலும் நிதர்சனம் யாதெனில், மனிதர்கள் யாவருக்கும் சில சந்தர்ப்பங்களில் இக்கட்டான தருணங்கள் வந்தடைவதுண்டு. அந்த சூழ்நிலையில் யாருக்கும் பதில் அளிக்கும் மனோநிலையில் மனிதன் இருக்க மாட்டான். இத்தகைய தவிர்த்தல் வெறுப்புணர்வு கொண்டதாக இருக்காது. மாறாக, அவனது மனநிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை என்பதுவே!

(நீங்கள் திரும்பி விடுங்கள்! என்று உங்களுக்குக் கூறப்பட்டால், திரும்பி விடுங்கள்! அதுவே உங்களுக்கு மிக உசிதமானது)

📖 ஸூராஹ் நூர் / வசனம் 28

என்ற வசனம் எங்கள் ஞாபகத்தில் இருக்கட்டும்!

எனினும் ஒருவர் தொடர்பு கொண்டும், பதில் அளிக்க முடியாத நிலையில் இருந்தால், பிறிதொரு நேரம்  மீள் தொடர்பு கொள்ளவது முறையானதாகும்.

நல்லெண்ணம்  வைப்பதில் நலவுகள் பல உள்ளன!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *