• Mon. Oct 13th, 2025

அல்லாஹ்வின் ஆசிர்வாதத்துக்குப் பிறகு, தாம்பத்திய வாழ்வின் இரகசியம்

Byadmin

Oct 20, 2024

ஒரு முறை ஒரு குடும்பவியல் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்துகோண்ட ஒரு பெண்மணியிடம்:

அவள் திருமணய் செய்து நாற்பது வருடங்கள் தாண்டியும் இன்னும் மகிழ்ச்சிகரமான தாம்பத்திய வாழ்வு வாழ்வதன் ரகசியம் என்னவென்று? கேட்கப்பட்டது.

கைதேர்ந்த சமையலா…

கண்கவரும் அழகா…

பெற்றுக்கொடுத்த

பிள்ளைச் செல்வமா

அல்லது வேறேதும்

காரணங்கள் உண்டா?

என்பதாக வினவப்பட்டது.

அதற்கு அந்தப் பெண்: அல்லாஹ்வின் ஆசிர்வாதத்துக்குப் பிறகு மகிழ்ச்சிகரமான தாம்பத்திய வாழ்வின் இரகசியம் மனைவியின் கரங்களில் தான் தங்கியுள்ளது’ என்றாள்.

பெண் நினைத்தால் தன் இல்வாழ்வை சுவனச் சோலையாகவும் மாற்றலாம், அல்லது நரகப் பாதாளமாக மாற்றலாம்.

பணம் இருந்தால் மகிழ்ச்சியும் கூடி வரும் என்று சொல்லாதீர்கள்…! பணத்தில் மிதக்கும் பல குடும்பப் பெண்கள், பார்க்கப் பரிதாபமான வாழ்க்கை வாழ்கின்றனர். தங்கள் கணவன்மார்களால் மதிக்கப்படாது ஒதுக்கப்படுகின்றனர்.

பிள்ளைகள் பெற்றுக்கொடுத்தால் மகிழ்ச்சி தொடரும் என்றும் சொல்லாதீர்கள். ஒரு பெண் பத்துப் பிள்ளைகள் பெற்றுக் கொடுத்திருப்பாள், ஆனாலும் தன் கணவனால் காதலிக்கப்படாமல் இருப்பாள். அல்லது விவாகரத்தும் கூட செய்யப்பட்டிருப்பாள்

எத்தனை பல பெண்கள் சமையலில் வித்தகர்களாக உள்ளனர். இருந்தும் கணவனின் நடத்தைகள் சரியில்லை என்பதாக முறையிடுகின்றனர்.

இடையில் குறுக்கிட்ட ஒளிபரப்பாளர் ஆச்சரியமாக கேட்கிறார்:

அப்படியென்றால் மகிழ்ச்சிகரமான இல்வாழ்வின் இரகசியம் தான் என்ன?

அவள் தொடர்ந்தும் சொல்கிறாள்;

என் கணவன் கோவப்படும் போதெல்லாம் நான் அமைதியை கடைப்பிடிப்பேன். முழு மரியாதையோடு மொளனியாகிவிடுவேன்.

தலை குனிந்து அடக்கமாக இருப்பேன்.

ஆனால் ஒன்று, சில பெண்கள் கிண்டலான பார்வையுடன் மெளனிப்பார்கள், பாருங்கள். அது ஆபத்தானது. ஆண்கள் புத்திசாலிகள். அவர்கள் அதனை கண்டுபிடித்து விடுவார்கள்.

ஒளிபரப்பாளர் கேட்கிறார்: இந்த நேரத்தில் அவன் இருக்கும் இடத்திலிருந்து விலகி ஓரமாகப் போகவேண்டியது தானே…?

அதற்கு அவள் சொல்கிறாள்: கூடாது, அது பெரும் தவறு! அவன் பேச்சைக் கேட்காமல் ஓடப் போகிறாள்’ என்று நினைப்பான். அவன் பேசுவதை எல்லாம் அமைதியாக செவிமடுக்க வேண்டும். பின்னர் அவன் பேசி முடிந்த பிறகு அவனை அவன் பாட்டில் சில நேரம் விட வேண்டும். அவன் இப்போது களைத்துப் போயிருப்பான். அவன் களைப்பாற வேண்டும். நாம் நம் வீட்டுப் பணிகளை தொடர வேண்டும்.

ஒளிபரப்பாளர் கேட்கிறார்:

அப்படியென்றால் இப்படியே பேசாமல் பல நாட்கள், பல வாரங்கள் இருப்பதா?

அவள் சொல்கிறாள்; அதுவும் பெரும் தப்பு.

அவன் இன்னும் பிடிவாதக்காரனாக மாறிவிடுவான். சில நேரம் கழிந்த பிறகு சூடாக ஒரு கிளாஸ் டீ அல்லது கூலாக ஒரு கிளாஸ் ஜுஸ் தயார் செய்து அவனுக்கு நான் கொடுத்துவிட்டு அவன் பக்கம் அமர்வேன். அவன் அந்த நேரத்தில் கவனிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பான்.

அவனுடன் வழமை போன்றே பேசுவேன். அவன் என்னிடம்: ‘நீ என்னுடன் கோபமா? என்று கேட்பான். நான்: ‘இல்லை’ என்பேன்.

என்னிடம் மன்னிப்புக் கேட்க ஆரம்பிப்பான்.

அன்பாக பேசத் தொடங்குவான்.

ஒளிபரப்பாளர் கேட்கிறார்: இந்த நேரத்தில் அவனை நீ நம்புவாயா?

அவள் சொல்கிறாள்: ஏன் இல்லாமல். அவன் கோபத்தில் பேசியதை நான் நம்ப வேண்டும், அவன் அமைதியாக பேசும் போது நான் நம்பக் கூடாதா?

ஒளிபரப்பாளர் கேட்கிறார்: எங்கே உங்கள் தன்மானம்?

அவள் சொல்கிறாள்: கணவன் மனைவிக்கு மத்தியில் என்ன தன்மானம் உள்ளது …! என் ஆடைகளை எல்லாம் கழட்டி அவன் முன் நின்றேன் என்றால் என் தன்மானம் எல்லாம் அவனை திருப்திப்படுத்துவதிலும் உறவில் விசுவாசமாக இருப்பதிலும் தான் தங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *