• Sat. Oct 11th, 2025

வாகன இறக்குமதி தொடர்பில் புதிய அறிவிப்பு

Byadmin

Dec 1, 2024

எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாகன இறக்குமதி நிச்சயமாக ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி உரிய முறையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் அங்கு உரையாற்றிய இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே,

“பெப்ரவரியில் இருந்து கண்டிப்பாக வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும்.

ஏனெனில் இந்த அரசாங்கம் எமக்கு ஒரு கொள்கையாக வாகன இறக்குமதியை அனுமதிப்பதாக ஒரு வார்த்தையை வழங்கியுள்ளது.

வாகனங்களை வழங்க தயாராக உள்ளோம். மேலும், இதன் மூலம் மக்கள் நியாயமான விலையில் நல்ல வாகனத்தைப் பெற முடியும்.

வாகனங்களின் இறக்குமதியை மீட்டெடுக்க பல விடயங்கள் உள்ளன.

வாகன இறக்குமதிக்கான கொள்கையை தயாரிப்பதற்காக நிதியமைச்சகம் குழுவொன்றை நியமித்துள்ளது.

தேசியக் கொள்கையை உருவாக்குவது வாகனங்களில் இருந்து தொடங்கியது. அது நல்ல விடயம்தான்.

பெப்ரவரி முதல் வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கான பணத்தை ஒதுக்க மத்திய வங்கி விருப்பம் தெரிவித்துள்ளது.

மேலும், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சர்வதேச நாணய நிதியமும் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் இலங்கையில் சுமார் 600 வாகன இறக்குமதியாளர்கள் 04 வருடங்களாக அனாதரவாக உள்ளனர்.

இங்குள்ள வர்த்தகர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *