மனிதனின் முகத்தில் 80 தசைகள் இருப்பதாகவும் அந்த 80 தசைகளும் மனிதனின் மூலையுடன் உள்ள செல்கலுடன் தொடர்புபட்டு காணப்படுவதாகவும் மேலும் இத்தசைகள் மனித உடம்புக்குள் பாரிய தாக்கத்தை செலுத்துவதாகவும் உளவியல் கூறுகின்றது.
இவை மனிதன் புன்னகைக்கும் பொழுது பயன்படுத்தப்படுவதாகவும் அதில் ஒவ்வொன்றும் மூளைக்கு ஒரு தகவளை அனுப்பி அதன் மூலம் மனிதன் ஓய்வையும், அமைதியையும் உணரும் படியும் மேலும் மூலையானது உடம்புக்கு இத்தகவலை அனுப்பி மனித உடல் முழுவதும் ஓய்வையும், அமைதியையும் உணரும் படியும் செய்கின்றது.
இதன் மூலம் மனித உடம்பினுல் Endorphin எனும் hormone அதிகரிப்பதனால் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெற காரணமாக இது அமைகின்றது.
எனவே ஒரு மனிதன் இதன் மூலம் உள அமைதி மற்றும் ஆரோக்கியத்தை உணர்ந்து கொள்வதுடன் மேலும் மனிதனுடைய உணர்வுகள் மற்றும் அவனது நடவடிக்கைகள் மற்றும் பிறருடனான தொடர்பு என்பவற்றிலும் இது நேரடியாக தாக்கத்தை செலுத்துகின்றது.
பின்பு இப் புன்னகை இன்னொருவருக்கு கடத்தப்பட்டு எமக்குள் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் அவர்களுக்கும் ஏற்பட காரணமாக அமைகின்றது.
-M.T.M.Imran Azhary