2024 ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை, மாபோலைப் பிரதேச 8 மஸ்ஜித்களின் நிர்வாகிகள், அல் அஷ்ரப் மஹா வித்தியாலயம் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று சபை மற்றும் பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து ஒரு சிறப்பான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின்போது கல்வி, கலாச்சாரம், ஒழுக்கம், பெளதிகவியல் மற்றும் விளையாட்டு போன்ற பாடசாலையின் முக்கிய அம்சங்கள் குறித்து ஆழமான கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
பாடசாலையின் எதிர்கால வளர்ச்சியை உறுதிசெய்வதற்காக, பாடசாலை அபிவிருத்தி நிர்வாக சபை, பழைய மாணவர் சங்கம் மற்றும் பழைய மாணவியர் சங்கம் இணைந்து சமூகநல தொண்டு அமைப்புகள் மற்றும் புத்திஜீவிகளுடன் எதிர்காலத்தில் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்த திட்டமிட்டுள்ளன.
இச் சிந்தனை மிக்க முயற்சிகள் இன்ஷாஅல்லாஹ் பாடசாலையின் முன்னேற்றத்தில் மாபெரும் பங்கு வகிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.