• Mon. Oct 13th, 2025

CLEAN SRILANKA திட்டம் தொடர்ந்தும்

Byadmin

Jan 10, 2025

CLEAN SRILANKA திட்டத்துடன் இணைந்து பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்ட போக்குவரத்து நடவடிக்கைகள் நாடு முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.

சில முச்சக்கர வண்டி சாரதிகள் தங்கள் வாகனங்களில் சேர்த்துள்ள தேவையற்ற அலங்காரகளை அகற்றுவதையும் தற்போது காணமுடிகிறது.

CLEAN SRILANKA திட்டத்திற்கு இணங்க, கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பிற வாகனங்களில் இருந்து பாதுகாப்பற்ற சாதனங்களை அகற்றும் பணியை பொலிஸார் சமீபத்தில் தொடங்கியதுடன், இந்த நடவடிக்கைகள் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தாமல் தொடர்கின்றது.

இருப்பினும், நேற்று (08) பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் தனியார் பேருந்து சங்கங்களுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, பயணிகள் போக்குவரத்து வாகனங்களில் இருந்து தேவையற்ற உதிரி பாகங்களை அகற்ற 3 மாத கால அவகாசம் வழங்க பதில் பொலிஸ்மா அதிபர் இணக்கம் வௌியிட்டார்.

இருப்பினும், முச்சக்கர வண்டிகளை அலங்கரிக்கப்பதற்காக பயன்படுத்தப்படும் பாகங்களை விற்கும் கடை உரிமையாளர்கள், தங்கள் விற்பனை இப்போது சரிந்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

இதற்கிடையில், CLEANSRI LANKA இன் கீழ், சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வந்து செல்லும் உனவடுன – யத்தேஹிமுல்ல சுற்றுலாப் பகுதிக்கான நுழைவு வீதியின் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறாக பொருத்தப்பட்டிருந்த பதாதைகளை ஹபராதுவ பிரதேச சபை அதிகாரிகள் அகற்றினர்.

மேலும், CLEAN SRILANKA திட்டத்தின் கீழ் மொரட்டுவை – சொய்சாபுர பகுதியில் இன்று காலை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இது மொரட்டுவை மாநகர சபையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *