• Sun. Oct 12th, 2025

ஈ-டிக்கெட் மோசடி – மேலும் இருவர் கைது

Byadmin

Jan 23, 2025

திருகோணமலை பகுதியில் ரயில்வே திணைக்களத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப அதிகாரி ஒருவர் நேற்று (22) குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரயில் இணைய பயணச்சீட்டு (ஈ டிக்கெட்) மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து 92 ரயில் ஈ டிக்கெட்டுகளும் மீட்கப்பட்டன.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக, இந்த டிக்கெட்டுகளை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிற பயணிகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக தன்வதம் வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேக நபர் மாத்தளை பகுதியில் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், 29 E டிக்கெட்டுகளை வைத்திருந்த ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து சுமார் 131,000 ரூபா பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் இன்று (23) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *