கண்டி ராஜ்யம் 1815ம் ஆண்டு பிரித்தானியரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த காலத்தில் அதற்கெதிராக பலர் போராடினார்கள். இதில் முக்கிய நபராகவும் தேசிய போராட்ட வீரராகவும் உதுவன்கந்தே சூரசரதியல் (உதுவன் மலை மாவனனெல்ல நகரில் அமைந்துள்ளது. உதுவன் என்ற பெயர் உதுமான் என்ற ஒருவர் இந்த மலையில் ஆரம்பத்தில் வாழந்ததாகவும் பின்னர் இது உதுவன் என்று திரிபடைந்ததாகவும் வரலாற்றுக்குறிப்பக்கள் சான்று பகிர்கின்றன) அடையாளப்படுத்தப்படுகிறார். சரதியல் இலங்கையின் ரொபின் ஹூட் என்று அழைக்ப்படுகிறார். மாவனெல்ல உதுவன்கந்த மலையில் இருந்து பிரித்தானியர்களுக்கு எதிராப் போராடியவராவார்.காலனித்துவாதிகளின் உடைமைகளை கைப்பற்றி அவற்றை பொதுமக்களுக்கு பகிர்ந்தளிப்பது சரதியலின் பண்பாக இருந்தது .கண்டியில் இருந்து கொழும்பு செல்லும் பிரித்தானியரின் ரெயிலை கொள்ளையிட்டு ஏழை மக்களுக்கு அவற்றை பகிர்ந்தளித்துவந்தார். பிரித்தானியர்களால் கைதுசெய்யப்பட்டு மஹர சிறைச்சாலையில் அடைக்கப்பட்டதன் பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்றார். மீண்டும் மாவனெல்ல உத்துவன் கந்த பகுதியில் கைதுசெய்யப்பட்டதன் பின்னர் அங்கிருந்தும் அவர் அதிஷ்டவசமாகத் தப்பித்தார். மீண்டும் பிரித்தானியரின் பொருட்களை சரதியல் கொள்ளையிட ஆரம்பித்தார். குருணாகல், பொல்கஹவெல,ரபுக்கன ஆகிய இடங்களில் பிரித்தானியரின் பொருட்களை அவர் கொள்கையிட்டார். சரதியலுடன் இணைந்து நம்பிக்கைக்குப் பாத்திரமாகப் செயற்பட்டவர் மம்மலே மரிக்கார் என்ற முஸ்லிம் ஆவார். முஹம்மது ஜவாத், நஸீர்தீன் குழுவின் ஏனைய அங்கத்தவர்களாவர் பிரித்தானியர்களை எதிர்க்கும் தனது பேராட்டத்தில் முஸ்லிம்களும் இணைந்துசெயற்பட்டார்கள். மாவன்லையை சேர்ந்த மம்மலே மரிக்கார், முஹம்மது ஜவாத், நஸீர்தீன் ஆகிய மூவரும் சரதியலின் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். 1867 மே மாதம் 07ம் திகதி சுரசரதியலும் மம்மலே மரிக்காரும் தூக்கிலிடப்பட்டு பிரித்தானியரால் கொல்லப்பட்டார்கள். ஆனால் கொல்லப்டுவதற்கு முன்னர் இலங்கையின் சட்டமா அதிபராக இருந்த ரிச்சட் மோர்கன் அவர்கள் பிரித்தானிய அரசாங்கம் சார்பாக வழக்கில் ஆஜரானார். ஜூரிசபை சரதியலும் மம்மலே மரிக்காரும் குற்றவாளிகள், இருவரும் தூக்கிலிடப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஆனால் பிரித்தானிய மகாராணியாரிடம் இருந்த வந்த கடிதத்தை ஜூரிசபை தவறாக வாசித்ததை அவர்கள் பின்னரே உணர்ந்துகொண்டார்கள். தீர்ப்பு இவ்வாறு எழுதப்பட்டிருந்து
kill him not, let him go “அவனைக்கொன்று விட வேண்டாம், விட்டு விடு”என்று வாசிப்பதற்கு பதிலாக
”kill him,not let him go” “அவனை கொன்று விடு, விட்டு விட வேண்டாம்” என்று ஜூரிசபை வாசித்ததது. ஒரு comma கால்புள்ளி சரதியலுக்கு எமனாக அமைந்து.
படம் : வலதில் இருப்பவர் மம்மலே மரிக்கார் இடது சரதியல்
