• Sun. Oct 12th, 2025

நல்லதண்ணியில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள்

Byadmin

Feb 25, 2025

நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா நல்லதன்னி வன மலை மேல் பகுதியில் திங்கட்கிழமை(24) பிற்பகல்ஏற்பட்டதிடீர்  காட்டுதீயை  அணைப்பதற்கு பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் (Bambi Bucket) யின் உதவியுடன் இலங்கைவிமானப்படை இலக்கம் (04)படையணிக்குசொந்தமான(பெல்412ஹெலிகாப்டர்)ஒன்றை பயன்படுத்தப்பட்டது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இலங்கைவிமானப்படையிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையையடுத்து, பாதுகாப்புசெயலாளர் எயார்வைஸ்மார்ஷல்சம்பத்தூயகொந்தாவின் அறிவுறுத்தலுக்கமைய இரத்மலானைவிமானப்படைதளத்தின்(பெல்412ஹெலிகொப்டர்) ஒன்று சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பப்பட்டது.

இந்த ஹெலிகாப்டர் (Bambi Bucket) உதவியுடன் தீ ஏற்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள மவ்சாகலை நீர்தேக்கத்திலிருந்து நீரைப்பெற்று பரவிக்கொண்டிருந்த தீயைவெற்றிகரமாக அணைத்தது.. அத்துடன், பாதுகாப்புஅமைச்சு, அனர்த்தமுகாமைத்துவநிலையம், ஆயுதப்படைகள் உட்பட ஏனைய அனைத்து திணைக்களங்களும் நாட்டில் எந்தவொரு அவசரநிலையிலும் உதவுவதற்குத் தயாராக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சு வலியுறுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *