சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரி தினத்திற்கு மறுநாள் வியாழக்கிழமை(27) விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அதற்கான பதில் பாடசாலையானது சனிக்கிழமை (01) நடைபெறும் எனவும் அத்துடன் குறித்த மாகாணத்தில் உள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் வழமை போல நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.