• Sun. Oct 12th, 2025

போதனாவியல் டிப்ளோமா ஆசிரியர்கள் நியமனம்

Byadmin

Oct 23, 2017

நாட்டிலுள்ள பத்தொன்பது தேசிய கல்விக் கல்லூரிகளில் பயின்று வெளியாகிய 3636 பேருக்கான
நியமனங்களை வழங்கும் நிகழ்வு கடந்த 20 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்றது.

பிரதமர் ரனில் விக்ரமசிங்ஹ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன.
சிறப்பான பிரஜைகளை நாட்டுக்கு பங்களிப்பு செய்வதற்கு தேவையான கல்வியை வழங்கும் அடிப்படைகள் எதிர்வரும் காலங்களில் உருவாக்கப்படும் என்று இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் ரனில் விக்ரமசிங்ஹ தெரிவித்தார்.

தற்போது நாட்டிலுள்ள மொத்த ஆசிரியர் தொகையில் 60 வீதமானோர் டிப்ளோமா அல்லது பட்டப்படிப்புத் தகுதிகளின்றி கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை பயிற்சிகள் பெறாத அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளுமாறும், எதிர்காலத்தில் பயிற்றப்பட்டவர்களை மாத்திரமே ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படுவதற்கான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் கல்வி அமைச்சரிடம் பிரதமர் கோரிக்கை விடுத்தார்.

கல்வித் துறை மேம்பாட்டுக்குத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் இதற்காக கல்வித் துறையில் உயர் வளர்ச்சி அடைந்த நாடுகளின் அனுபவங்கள் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் பிரதமர் இதன் போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் கல்வி ராஜாங்க அமைச்சர் வி.ராதாகிரிஷ்ணன் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

MMM Nussak

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *