• Sun. Oct 12th, 2025

சைட்டம் மருத்துவக் கல்லூரியை தடை செய்ய வேண்டும்..- வேறு தீர்மானங்கள் செல்லுபடியாகாது..

Byadmin

Oct 23, 2017

மாலபே, சைட்­டம் தனியார் மருத்­து­வக் கல்­லூரி தொடர்­பில் அரசாங்கம் தீர்­மா­னம் எடுக்­கு­மா­யின், அது அந்த நிறு­வ­னத்தைத் தடை செய்­யும் வகை­யில் மாத்­தி­ரமே அமைய வேண்­டும் என அரச மருத்­துவ அதி­கா­ரி­கள் சங்­கம் தெரி­வித்­துள்­ளது.

இது தவிர்ந்த எந்­த­வொரு தீர்­மா­னத்­தை­யும் ஏற்­றுக் கொள்ள மாட்­டோம் என்று குறித்த சங்­கத்­தின் செய­ லாளர் ஹரித அளுத்கே தெரி­வித்­தார்.

சைட்­டம் தொடர்­பில் விரை­வில் காத்­தி­ர­மான தீர்­மா­னத்தை அரசு அறி­விக்­கும் என அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன அண்­மை­யில் கூறி­யி­ருந்­தார்.

மகா­நா­யக்­கர்­க­ளும் இது தொடர்­பில் உட­ன­டி­யாகத் தீர்­வொன்றை அறி­விக்­கு­மாறு அர­சுக்கு அழுத்­தங்­களை கொடுத்­துள்­ள­னர்.

உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல சைட்டம் எந்தக் காரணம் கொண்டும் மூடப்பட மாட்டாது என்று நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *