பணியிட வன்முறை மற்றும் பல்வேறு வகையான துன்புறுத்தல்கள் காரணமாக இந்த நாட்டில் ஒவ்வொரு நபரும் வருடத்திற்கு ஆறு வேலை நாட்களை இழக்கிறார்கள் என்று, ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை கூறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வேலை நாட்கள் இழப்பால் 1.7 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்