பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளிபாத மலை யாத்திரை பருவத்தை முன்னிட்டு, புதன்கிழமை (12) முதல் நான்கு சிறப்பு ரயில்களை இயக்க இலங்கை ரயில்வே திட்டமிட்டுள்ளது.
அதன்படி,குறித்த சிறப்பு ரயில்கள் கொழும்பு கோட்டை – பதுளைக்கும் மேலும் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கும் (KKS) இயக்கப்படும்.
முதல் ரயில் மார்ச் 12, 14, 16, 21, 23, 28 மற்றும் 31 ஆகிய திகதிகளில் இரவு 7.30 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு புறப்படும், இரண்டாவது ரயில் மார்ச் 12, 14, 16, 21, 23, 28 மற்றும் 31 ஆகிய திகதிகளில் மாலை 5.20 மணிக்கு பதுளையிலிருந்து புறப்படும்.
மூன்றாவது ரயில் மார்ச் 13 முதல் 31 வரை தினமும் காலை 5.30 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறைக்கு புறப்படும், நான்காவது ரயில் மார்ச் 13 முதல் 31 வரை தினமும் பிற்பகல் 1.50 மணிக்கு காங்கேசந்துறையிலிருந்து புறப்படும்.