• Sun. Oct 12th, 2025

Dr அர்ச்சுனா – நடவடிக்கை எடுக்க சபை முதல்வர், சபாநாயகரிடம் கோரிக்கை

Byadmin

Mar 17, 2025

சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆபாசமான கருத்துக்களை முன்வைத்துள்ளமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று சபையில் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் இன்று (17) விசேட கூற்றொன்றை முன்வைத்த சபை முதல்வர் மேற்படி வேண்டுகோளை விடுத்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

”நிலையியற் கட்டளை 91 (ஊ) பிரிவுக்கமைய சபையில் உரையாற்றும் ஒருவர், ஒருவர் மீது அவதூறான வகையிலோ அல்லது முறையற்ற வார்த்தைப் பிரயோகங்களை செய்தாலோ அந்த எம்.பிக்கு சபாநாயகரால் அது தொடர்பில் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

அவ்வாறு உத்தரவிடுவதுடன் அந்த வார்த்தைகளை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறும் அறிவித்தல் விடுக்க முடியும். அந்தவகையில், சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் தொடர்பில் ஆபாசமான வார்த்தைப் பிரயோகத்தை சபையில் எம்.பி. ஒருவர் பயன்படுத்தியுள்ளார் என்று அது தொடர்பாக பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்தியொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற நிலையியல் கட்டளை 91 (உ) பிரிவை மீறும் வகையில் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நடந்துகொண்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து இந்த நிலையியற் கட்டளைக்கமையவோ அல்லது பொருத்தமான நிலையியற் கட்டளைக்கு அமையவோ சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் சபை முதல்வர் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *