பொலிஸில் சேருவதற்கான விதிகளை சுட்டிக் காட்டும் மூத்த பொலிஸ் அதிகாரியின் காணொளியை இலங்கை பொலிஸ் வெளியிட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரி தனது உரையில், பச்சை குத்திய நபர்கள் பொலிஸ் திணைக்களத்திலோ அல்லது முப்படைகளினாலோ பணியமர்த்தப்பட மாட்டார்கள் என்று கூறுகிறார்.
“நீங்கள் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்கலாம். ஆனால் நீங்கள் பச்சை குத்தியிருந்தால், இலங்கை பொலிஸிலோ அல்லது முப்படைகளிலோ நீங்கள் பணியமர்த்தப்பட மாட்டீர்கள். தோல் உடலின் மிகப்பெரிய உறுப்பு. உங்கள் சருமத்தை அழிப்பது நல்லதல்ல,” என்று அவர் கூறினார்.