இந்த நாட்டில் சிங்களவர் ஒருவர் அனுபவிக்கும் சகல உரிமைகளையும், சிங்களவர்களல்லாதவர்களுக்கு வழங்கத் தயார் எனவும் இந்த நாட்டை துண்டாட ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லையெனவும் கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ தேரர் அறிவித்துள்ளார்.
நாட்டை பிராந்தியங்களாக பிரித்துக் கூறு போட ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லையெனக் குறிப்பிட்ட தேரர், பிரிபடாத இலங்கைக்குள் வரப்பிரசாதங்களை அனுபவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேரர் மேலும் கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்