• Sat. Oct 11th, 2025

களனி ஆற்றில் மீட்க்கப்பட்ட ஆணின் சடலத்தால் பரபரப்பு

Byadmin

Apr 27, 2025

பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களனி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பேலியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, நேற்று (26) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இறந்தவர் சுமார் 50 வயதுடையவர், சுமார் 5 அடி 6 அங்குலம் உயரம் கொண்டவர் என்றும் நீல நிற டி-சர்ட் அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடல் சற்று சிதைந்த நிலையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *