• Sat. Oct 11th, 2025

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரு தினங்களாக நடைபெற்ற 17ஆவது பட்டமளிப்பு விழா

Byadmin

May 4, 2025

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது ஆண்டு பொது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை(03) ஞாயிற்றுக்கிழமை (04) 2 தினங்களாக பல்கலைக்கழகத்தின் பிரதான அரங்கில் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபாவின் முன்னிலையில், பதில் உபவேந்தர் யூ.எல்.மஜீத் தலைமையில் நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவில் ஆறு அமர்வுகளில் 2077 மாணவர்கள் பட்டங்களைப் பெற்றனர். முதலாம் நாள் முதல் அமர்வில் இலங்கை உயர் நீதிமன்ற நீதிபதி யசந்த கொடகொடவும், இரண்டாம் அமர்வில் களனி பல் கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை பேராசிரியர் கலாநிதி சீதா.பி. பண்டாரவும், மூன்றாவது அமர்வில் இலங்கைக்கான சவூதி அரேபிய நாட்டின் தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானியும் கலந்து கொண்டு உரையாற்றினர்.பிரயோக விஞ்ஞான பீடத்தில் 172 மாணவர்களும் பொறியியல் பீடத்தி லிருந்து 82 மாணவர்களும் தொழினுட்பவியல் பீடத்திலிருந்து 102 மாண வர்களும் கலை கலாச்சார பீடத்திலிருந்து 314 மாணவர்களும் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்திலிருந்து 342 மாணவர்களும் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்திலிருந்து 378 மாணவர்களும் வெளிவாரி பட்டப் படிப்பு மாணவர்கள் 687 மாணவர் களுமாக 2077 மாணவர்கள் பட்டங்களைப் பெறவுள்ளதாக பதிவாளர் எம். ஐ. நௌபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *